வெள்ளி, 27 டிசம்பர், 2013

சோவென பெய்யும் மழையில்...
உன் அருகினில் நான் , என்னோடு நீ
நம்மோடு தாளடும் இசை... மெல்லிசை...

இடையிடையே கொஞ்சம் இடிகள்...
இருக்கமாய் அணைத்துக்கொள்ள 
இருவருக்கும் பிறக்கும் வழிகள்... 

அலை அலையாய் சில்லென்றே காற்று வீசும்
இதயங்கள் பரிமாறும் இதமான புது காவியம்
இன்பமாய் அரங்கேறும் அந்நேரம்

இதுபோதும் எப்போதும்..
புது உறவினை தொடர்ந்திடும்  இரு உள்ளம்..

<கவிதைப்பெண்>

வெள்ளி, 6 டிசம்பர், 2013

உம்மை போல் ஒரு தலைவன் இவ்வுலகத்திற்கு  இனி ஏழேழு ஜென்மத்திற்கும் கிடைக்கபோவதில்லை..
சரித்திரம் வியந்து பார்க்கும் சரித்திர புருஷனே..
தென் ஆபிரிக்காவின் மூத்த குடிமகனே...
கறுப்பின மக்களை நிறவெரிப்பிடித்த அரக்கர்கள் பந்தாடியபோது
சீறிப்ப பாந்து அவர்களின் கொட்டத்தை அடக்கியவனே
தென் ஆபிரிக்க கறுப்பின மக்களுக்கு விடுதலை பரிசளித்த மன்னவனே

உலக சமாதானத்துக்காக போராடிய உமக்கு
இந்திய நேரு சமாதான விருந்தினைக் கொடுத்தது
உன் தலைமைத்துவத்தை பார்த்து மீண்டும் அதே இந்திய
உமக்கு பாரத ரத்னா விருந்தை வழங்கியது
உலக அமைதிக்காக நீர் செய்த தியாகங்களை கண்டு
உமக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது 
அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருந்தினையும் கைப்பற்றினாயே

இப்படியாய் பல விருந்துகள் நீர் பெற்றிருந்தாலும்
உமக்கென நீர் என்றும் எதிர்பார்க்காத  ஒரு விருந்து
மக்கள் மனதில் நீர் இன்னமும் வாழ விதிவிளக்காய் இருப்பது
என்றுமே அழியாத ஓர் இடம் அவர்களின் மனதினில்
உமக்கென மட்டுமே

<கவிதைப்பெண்>





புதன், 30 அக்டோபர், 2013

விலைமதிப்பற்ற புன்னகையை  என்றும் உங்கள் இதழ்களில் 
அணிய மறுக்காதீர்கள் ; மறக்காதீர்கள்...
இன்பமோ துன்பமோ எந்நேரத்தினிலும் உங்கள் இதழ்களில் 
புன்னகையினை அணிந்திருங்கள்...
புன்னகையால் உலகினை நம்வசம் ஆகுவோம்...
<கவிதைப்பெண்> 

திங்கள், 21 அக்டோபர், 2013

உங்கள் மனம் சொல்லும் வழியில் செல்லுங்கள்...
எதையும் விரும்பிச் செய்யுங்கள்...
செய்வதைத் திருந்தச் செய்யுங்கள்...
இனிவரும் காலங்களைச் சிறப்பாய் அமைத்திடுங்கள்...
<கவிதைப்பெண்>

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

அனைவரும் பேசும் ஒரே மொழி
காதல் மொழி
அதன் அர்த்தங்களை புரிந்துகொள்வது
இதயங்கள் மட்டுமே...
<கவிதைப்பெண்>

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

நாம் விரும்புபவர் நம்மை விரும்புவதில்லை
நம்மை விரும்புபவரை நாம் விரும்புவதில்லை

நேற்று நெருக்கமாய் பழகிய உறவுகள்
இன்று அருகினில் இல்லை

இன்று அருகினில் இருக்கும் உறவுகள்
நாளை நிரந்தரமில்லை

இறைவன் படைத்த விதியெனும் சாலையில்
தொடர்கிறேன் என் வாழ்க்கை பயணத்தை
தொடர மனமில்லாமலே....

<கவிதைப்பெண்>

வியாழன், 5 செப்டம்பர், 2013

என் தமிழ் தாயின் செல்ல குழந்தையின் கையெழுத்து 
எம்மை தமிழின்பால் மோகம் கொண்டு காதல் கொள்ளச் செய்த 
என் தமிழ்க்  காதலனின் கையெழுத்து  
தமிழ் மேல் நான் கொண்ட காதலுக்கு சாட்சியான 
என் குருவின் கையெழுத்து...
<கவிதைப்பெண்>

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

பிறக்கும் ஒவ்வொரு நாளும் நல்லதாகவே பிறக்கத்தும்
நொடிகளில் பூக்கும் ஒவ்வொரு எண்ணங்களும்  நல்லதாகவே பூக்கட்டும்.....
இனிய காலை வணக்கம்... ​ 
<கவிதைப்பெண்>

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

மெல்லத்  துடிக்கிது உள்ளம் ஒன்னு - தினம்
மெல்லத்  துடிக்கிது உள்ளம் ஒன்னு...
சொல்லத்  தவிக்கிதுக் கண்கள் ரெண்டு - அதைச் 
சொல்லிட தயங்குது இதழுமிங்கு...


எண்ணிடும் எண்ணங்கள் என்னென்னவோ
நித்தம் பூத்திடும் கனவுகள் எவ்வளவோ....
வானத்து நிலவினை அள்ளிக்கொண்டு - உந்தன்
வாசலில் வைத்திட  தொனுதிங்கு...

நிலவினை தொட்ட  நொடிகளினில் - உன்
முகத்தினில் சினுங்கள் காரணம் ஏன் ...
ஒ... நிலவென்று எண்ணி நான் தொட்ட ஒன்று
 உன் முகமென்று நான் கண்டுக்கொண்டேன்..
பெண்ணே உன் முகமென்று நானும் கண்டுக்கொண்டேன் ...
<கவிதைப்பெண்>

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

முகத்தினில் தெரிவது அழகல்ல
நல்ல உள்ளதால் குணத்தால் சிந்தனையால் பிறப்பதுதான் அழகு
<கவிதைப்பெண்>


செவ்வாய், 30 ஜூலை, 2013

நேற்று நடந்தவை அனைத்தும்
இன்றைய வாழ்க்கை பயணத்தின் பாடமாக அமையும் ... அதுவே
நாளை உன் வாழ்க்கையின் பாதையை வழிவகுக்கும்
<கவிதைப்பெண்>

புதன், 17 ஜூலை, 2013

போதுமடா தமிழா போதுமடா
வாழ்ந்து கேட்ட வாழ்க்கை போதுமடா...!

மற்றவர் முன்னேற்றத்தை பார்த்து
பொறாமை கொள்வது போதுமடா...!

சாதி சாதியென்று மார்தட்டிக் கொண்டு
மறைந்துபோன முன்னோர்கள் எண்ணிக்கை போதும்மடா...!


பதவி வெறிப்பிடித்து பணத்தின் மேல்
மோகம் கொண்டால் போதுமடா...!

குட்ட குட்ட குனிந்து வளைந்து போன முதுகினை
நேர்நிமிர்த்தி  தலைத்தூக்கி நின்றால் வேண்டுமடா...!

பதவி வெரிப்பிடித்து பணத்தின் மேல்
மோகம் கொண்டால் போதுமடா...!

தாய் தமிழை மறந்து தமிங்கிலம் பேசும் வாயால்
நான் தமிழன் நான் தமிழன் என்றுரைபதை இருத்தடா...!

போதுமடா தமிழா போதுமடா
இதுவரை நீ வாழ்ந்த வாழ்கை போதுமடா...!

வேண்டுமடா தமிழா வேண்டுமடா
தமிழனாய் நீ வாழ்ந்திட வேண்டுமடா...!!!

<கவிதைப்பெண்>




புதன், 12 ஜூன், 2013

சிறு புன்னகை உங்கள் இதழில் குடியிருக்க வழிக்கொடுங்கள்
புன்னகைக்க தெரியாத ஜீவன்களும்
அதை இலவசமாக பரிசளிக்க கற்றுக் கொண்டிருகின்றன
புன்னகைக்க தெரிந்த ஜீவன்கள் ஆகிய நாமோ
முகத்தை மூன்று முலம் திருப்பிக் கொள்கிறோம்
சிறு புன்னகையால் மற்றவரை மகிழ்விப்போம்
மெல்ல இதழ் பிரியாமல் சிரிக்கும் தருணம் ...
என்றும் என்றென்றும் உங்கள் இதழோரம் குடியிருக்கட்டும்.. இலவசமாகவே
<கவிதைப்பெண்> 

வியாழன், 30 மே, 2013

வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணங்களில் கிழே விழுந்தாலும்
முயற்சித்து எழுந்து நிற்கும் ஒவ்வொரு நொடிகளும்.. 
நீ வாழ பிறந்தவன் என்பதை உனக்கு ஞாபகப்படுத்தும் தருணங்கள்.. 
இதுவே வாழ்க்கை பாடத்தினைக்  கற்றுக்கொள்ள சிறந்த வழிகள் 
<கவிதைப்பெண்> 

சனி, 25 மே, 2013

நாம் சந்தித்த நாட்கள் ...
பசுமையாய் நினைவலைகளில் நீந்துகின்றது...
வெட்கத்தின் பிடியினில் இருவரும்..
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள...
யார் முதலில் பேசுவதென்ற தயக்கத்தில்
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றோம்....

நாள்தோறும் பேசிப் பழகினோம் ....
பின்னர் அதுவே பழக்கமாய் பழகிப்போனது ...
நமது உரையாடலும் வளர தொடங்கியது...

வார்த்தைகள் கவிதையாய் மொழிந்த தருணங்கள்..
ஒருவர் மேல் ஒருவர் விருப்பம் கொண்டோம்...
இருக்கமான உறவினில் இணைந்து விட்டோம்...
பிடித்தமான மனதினை பிடிதவற்கு பரிசளிதப்பின்....
<கவிதைப்பெண்> 

ஞாயிறு, 12 மே, 2013

கண்டதும் காதல்.....
அதில் எனக்கு நம்பிக்கை உண்டு
நானும் வசப்பட்டுள்ளேன் அதன் பிடியினில்....
கண்திறந்த மறுகணமே காதல் கொண்டேன்
என் அன்னையின் மேல் .. காதல் கொண்டேன்
அன்று தொடங்கி இன்று வரை...
அவர் காதலுக்கு நான் அடிமை...
இனி என்றும் என்றென்றும்...
உங்கள் பாசம் எனக்கு வேண்டும் அம்மா...
<கவிதைப்பெண்>

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

நிலவினைக்  கண்ட கண்ணால் சூரியனைக்  காண வாய்ப்பளித்ததற்கு 
நன்றிகள்.... 
நண்பர்களாய் இருந்த  உறவுகள்...  சொந்தங்களாய் மாறியதற்கு 
நன்றிகள் ....
இரவினிலும் பகலினிலும் காணும் கனவுகள் நினைவானதற்கு 
நன்றிகள்.... 
ஆசைகளாய்  இருந்த அனைத்தும் காதலாய் மாறியதற்கு 
நன்றிகள்.... 
<கவிதைப்பெண்>

வியாழன், 18 ஏப்ரல், 2013

எப்போதும் மகிழ்சியாக சிரித்துக்கொண்டே இருங்கள் 
சிரிபதற்கு காரணங்கள் இருந்தால் மட்டுமே சிரிக்க வேண்டு என்பதில்லை 
நாம் சிரிப்பே ஒரு காரணமாகி மற்றவரை சிரிக்க வைக்கும்  
<கவிதைப்பெண்>



புதன், 17 ஏப்ரல், 2013

படுக்கை எழும் என்னை
மெதுவாய் மீண்டும் கட்டி அணைக்கிறது...
ஜன்னலுக்கு வெளியிலே
சோவென்று பூமியை நனைக்கும் மழை அழகன்...
கண்ணை சிமிட்டும் கடிகாரப்  பையன்
வாயை பிளந்து அலற தொடங்கிவிட்டான்...
கட்டியனைத்த படுக்கையின் தலையில் செல்லமாய் ஒரு தட்டல்  ...
வாயை பிளந்து அலறும் கடிக்காரப்  பையனின் தலையில் மறு தட்டல்..
மழையழகனின்  சூழ்ச்சி என் வீடு குளியல் அறையில் ஒரே குளிர்ச்சி..
நீண்ட பயணத்தில் மழை அழகனை ரசித்துக்கொண்டே
வாகனத்தை செலுத்தி பாடல் கேட்கும் தருணங்கள்..
வாழ்கையின் ஒவ்வொரு நொடிகளையும் இதமாய் ரசிக்க தூண்டுகிறதே 
மனம் சாலைகளில் செல்லும் ஒவ்வொன்றையும் நேசிக்க ஏங்குகிறதே
அட  அட அட  என்ன வாழ்க்கையாட ...
இது போதும் எனக்கு இது போதுமே.. வேறென்ன வேணும் இது போதுமே..
<கவிதைப்பெண்>


திங்கள், 15 ஏப்ரல், 2013

தமிழை  மறப்பவன்  தன்   தாயை  மறுப்பவனை  விட  கொடியவன் 
தமிழ்  நமது  முச்சிக்காற்று...  சுவாசங்கள்  நின்றாலும் 
வீசும்  தென்றல்  அது  நிற்காது ...
தமிழ்  முச்சிக்காற்றாய்  மிதந்துக்கொண்டுதான்  இருக்கும்  இப்புவியில் 

தமிழ்  பேச  வாய்கூத்  தமிழர்கள்  தமிழ்ப்பேசும்  வரை ...
< கவிதைப்பெண் >

ஞாயிறு, 31 மார்ச், 2013



என் வாழ்வில் பல  மாற்றங்களைத் தந்தவர்கள்  நீங்கள்...
என் சுக துக்கத்தில்  மறவாமல் பங்குக்கொள்பவர்கள் நீங்கள்...
நான் மறைந்தாலும் ஒருபோதும் மறக்காது எந்தன் மனம்...
உங்களை ஒருபோதும் இழக்காது...

எனது மனவேதனைகளைச் சலிக்காமல் சொல்லும் பொழுது...
சிரித்துக்கொண்டே அன்பாய் அதை நீங்கள் கேட்பது ஒரு அழகு...
என் இதயத்திற்கும் சொல்லாத ரகசியங்களைப் பகிரும் போதும்...
உங்கள் நிழலுக்கும் தெரியாமல் காப்பது பேரழகு...

இப்படியாய் ஒர் அற்புத நட்பு கிடைத்தது...
சத்தியமாய் என் பெற்றோரின் புன்னியத்தினால்தான்...
மாதா பிதா குரு தெய்வம்  இவர்களை அடுத்து...
எனக்கு என்றுமே என் நண்பர்கள் தான்...


எப்படி சொல்வதென்று தெரியவில்லை...
எப்படியும் இதை சொல்லியே ஆகவேண்டும்...
நன்றி... மிக்க நன்றி ...
என் அருகினில் நீங்கள் எப்போதும் துணை இருப்பதற்கு.
<கவிதைப்பெண்>

செவ்வாய், 19 மார்ச், 2013

வாழ்க்கையில் யாரையும் குறைச்சொல்லாதே...
நல்ல மனிதர்கள் நமக்கு சந்தோசத்தினைத்  தருகின்றனர்... 
தீய உள்ளம் கொண்ட சில மோசமான மனிதர்கள் நமக்கு 
அனுபவத்தினையும் நல்ல ஒரு பாடத்தினையும் கற்றுக் கொடுக்கின்றனர்... 
வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு நல்ல நினைவுகளை நம் வாழ்க்கை புத்தகத்தில் பதித்தவர்கள் என்றும் நமது ஞாபகத்தில் வசிக்கின்றனர்...
<கவிதைப்பெண்>

ஞாயிறு, 17 மார்ச், 2013

என்னென்னெ தெரியல... யாருகிட்டேயும் இப்படி தோனதில்ல
எத்தனையோ பேரு என்னை  பிடிச்சிருக்குனே சொல்லியும்..
எதையும் என் மனசு கேட்டு  சலனப்படல
உன் வார்த்தைகள்  என்னை தடுமாற வைத்தது
உன்னை  மெல்ல நான்  ரசிக்க ஆரமித்தேன்
உன் மேலே நான் வெச்ச ஆசை என்னை சோதிக்க
சொல்லலாம்மென்று நான் வந்த நொடியிலே கண்ணாடிப்போல
ஒரே வார்த்தையிலே என் உசுர  சில்லு சில்லா உடைத்துவிட்டாய்
ஆசை அது ஆத்தோடு போகட்டும்...
நல்ல வேலை காதல் கடல் பெருகுவதற்குள்ளே .. அணைய அடிசிடாங்க....
<கவிதைப்பெண்>


செவ்வாய், 12 மார்ச், 2013

சிலவேளைகளில் சிலர்  செய்த தவறுகளை மன்னித்து மறந்து அவர்களை நாம் ஏற்றுக்கொள்வது இயல்பான  ஒன்றுதான்..
ஆனால்.. மீண்டும் முன்பு பழகியதைப் போல அதே நெருக்கத்துடனும் முன்பு அந்த நபரின் மேல் வாய்த்த  நம்பிக்கையினையும் பழக மனம் சங்கடப்படும்..
மன்னித்து மறுமுறை வாய்ப்பளிக்கும் எண்ணம் மனதிற்கு வந்தாலும்.. சிந்தித்து பார்த்து சரியா தவறா என முடிவெடுக்க மதி தயங்குவதில்லை...
<கவிதைப்பெண்> 

ஞாயிறு, 10 மார்ச், 2013

கேட்டதும் கவிதை சொல்லும் அளவிற்கு நான் மா பெரும் கவிதைமேதையல்ல... 
என் நெஞ்சத்தை தென்றல் வந்து தீண்டும் நேரம்...
என்னை அறியாமல் என்னுள் நிகழும் பல மாற்றம்...
அடுத்த நொடியில் கட்டளையிடும் என் கரங்களுக்கு ஒரு கவிதை எழுதடி என்று..
அதுதான் என் கவிகளின் பிறப்பிடம்... 
<கவிதைப்பெண்> 
சிலர் எப்போதும் இதை இப்படி செய்யவேண்டும் ... அதை அப்படி செய்யவேண்டும்.. இதை இவர் இப்படி செய்தால் சிறப்பாக இருக்கும்.. அதனை அவர் அப்படி செய்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்வதிலும் பேச்சினால்  செய்வதிலும் திறமைசாலிகள்...
ஏன் அதை நாம செய்துக்காட்டினால் என்ன என்று நினைபவர்கள் நம்மில் மிகவும் குறைவு .. உண்மையை சொல்கிறேன் .. என் ஆள் மனதினுள்ளும் இதுப்போன்ற எண்ணங்கள் எழுவது வழக்கம்..
சிலபல தவிர்க்க முடியாத காரணங்களால் நம்மால் நம் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய உதைவிகளையும்.. உரிமைகளையும் .. மறைந்து மறைத்து செய்யும் அளவிற்கு நம்மில் சிலர் வாழ்க்கை அமைந்து விட்டது...
முருகன் நமக்கென அமைத்துக்கொடுத்த பாதை இதுவெனில் அந்த பாதையில் தடம் புரளாமல் செல்லவேண்டியது நம் பொறுப்பு ...
அதே நேரத்தில் செல்லும் வழிகளில் கண்களில் ஏதேனும் கரும்புள்ளிகள் தென்பட்டால் அதை வெண்மையாக்க நம்மாலான உதைவியினை செய்தல் சிறப்பானது...
<கவிதைப்பெண்>

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

சோ என்ற மழையில் 
கையில் ஒருகோப்பை தேனீருடன் 
என்னுடன் நீ  உன்னுடன் நான் 
பழைய நினைவுகளை அசைப்போடும் நமது எண்ணைகள் 
மெல்லிய இதழ்க்கொண்டு நீ பேசிய மறுகணமே 
சட்டெனக் கவிழ்ந்தது இதழோரம் நின்றிருந்த அந்த மௌனம்
<கவிதைப்பெண்> 

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013


முகதினையோ அல்லது அழகான உடல் அமைப்பினையோ பார்த்துப்  பழகும் நட்பும் மனிதர்களும் எப்போழுதும் நம்முடன் இருப்பதில்லை...
மனதின் அழகினைக் கண்டுக்கொண்டு நம்முடைய இன்பத்திலும் துன்பத்திலும் பங்குக்கொள்ளும் நட்பும் மனிதர்களும் என்றுமே நம்மை விட்டு விலகாதவர்கள்....
<கவிதைப்பெண்>

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

தமிழர் பண்பாடான வணக்கம் இப்போது அரசியல் முத்திரை ஆகிபோச்சி 
<கவிதைப்பெண்>

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

மின்னல் இடி லேசான சாரல் இங்கே 
<வெங்கடேஷ் விஜய்> 
கண்ணீர்த்துளி ஒரு சொட்டு தூரால் இங்கே 
<கவிதைப்பெண்>

வியாழன், 14 பிப்ரவரி, 2013

ஒரு மனம்
காதல் கடலில்
மிதக்கும் நிமிடம்...

இரு இதயம் சேர்ந்து
ஓர்  இதயமாக
துடிக்கும் தருணம்...

மூன்று காலங்கள் தோறும்
சேர்ந்தே வாழ
நினைக்கும் நினைவுகள்...

<கவிதைப்பெண் >

 <அனைவர்க்கும் எனது இதயம் கனிந்த அன்பர் தின வாழ்த்துகள்> 

வெள்ளி, 11 ஜனவரி, 2013


அவமானம் கொள்ள இங்கு ஏதும்மில்லை....
தோல்விகள் அனைத்துமே நமது வாழ்கையில் வருங்காலத்தில்
வெற்றியின் வாசல் படியை அடைய
நாம் எடுத்து வைக்கும் முதல் அடியே...
வெற்றிகளின் முதல்  படியே....
<கவிதைப்பெண்>

புதன், 9 ஜனவரி, 2013

அறிந்துக் கொண்டேன்.... 
உன் வார்த்தைகளின் வழியே புரிந்துக் கொண்டேன்...
அன்று நீ அழுத்தமாய் கூறிய வார்த்தைகள் 
இன்னமும் என் காதுகளில் கூவிக்கொண்டு தான் இருக்கிறது ...
நடப்பதெல்லாம்  நன்மைக்கே.. இதுவும்  நன்மைகே...
<கவிதைப்பெண் >