ஞாயிறு, 28 அக்டோபர், 2012



பத்துப்பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து
நமது பிள்ளைகள் நண்பர்களாக பழகும் காலம்
நாம் கூடிப்பழகிய அழகிய கனாக்காலங்கள்
நமது நினைவினை வருடும் நேரம்..

நட்பினில் சின்ன சின்ன கோவங்கள்...
என்றும் என்றென்றும்  சகஜமே...

நரைத்த தலை முடியும்... மனதின் ஓரத்தில்  இருந்த கோவங்களும்
உதிர்ந்து விழாமல் இருக்காது....  
<கவிதைப்பெண்>


chinna chinna kovanggal
natpinil endrume sagajam ...
patthu pannirendu aandugal kalithu namathu pillaigal nanbargaala palagum bothu
nammudaiya alagiya kanaakaalangal ninaivinai varudum neram
naraitha thalaimudiyum... manathin orathil iruntha kovangalum
uthirnthu vilaamal irukaathu...





வியாழன், 25 அக்டோபர், 2012

என் உயிர் நண்பன் ... நல்ல தம்பியும் கூட...
வாய்திறந்து மொழிப் பேசாவிட்டாலும்...
கண்ணசைவிலும் மௌனத்தின் ராகங்களின் வழியினிலும்
என் உணர்வலைகளைப் புரிந்து மறுமொழிப்  பேசுபவன்
அவன் பாஷை  எனக்கு புரியாத என்ன  ??? 
en uyir nanban.. nalla tambiyum kuda... vaai thiranthu mozhi pesaaviddalum kannasaivilum maunathin raagangalin vazhigalilum en unarvinai purinthu marumozhi pesubavan... avan mozhigal enaku puriyatha enne???



vaalvai sugamaaga nagarthi sellum alagiya uravu...
anaivarathu vaalvilum kidaipathu arithu...
வாழ்வை சுகமாக நகர்த்திச் செல்லும் அழகிய உறவு
அனைவரது வாழ்விலும் கிடைப்பது அரிது
<கவிதைப்பெண்>

செவ்வாய், 16 அக்டோபர், 2012

சிலவேளைகளில் உண்மைகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு கசப்பாகதான் இருக்கும்.. என்னே செய்ய...???
உடல் நலம் குறைந்தால் .. என்னதான் கசப்பாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் .. நலம் பெற கசக்கும் மருந்தை சாப்பிடுவதில்லையா ..??? அதுபோலதான் இதும்...
இப்போதைய சூழ்நிலை சரியாகவேண்டுமெனில் இந்த கசப்பினை ஏற்றுக்கொள்ளதான்  வேண்டும்.. மருந்தினை  உண்ட  உடல் நலம் சரி ஆவதைப்  போல...  இந்த நிலையை கடந்து உங்கள் வாழ்கையும் நலம் பெரும்.. வாழ்க வளமுடன்.
காரணம் இல்லாமல் எதுவும் நிகழாது .. எது நடந்தாலும் அது நன்மைக்கே...
<கவிதைப்பெண்>

செவ்வாய், 9 அக்டோபர், 2012

ஏனோ தெரியல... மனசு துடிக்கல...
லப்டப் லப்டப்னே சத்தம் கேக்குது...
ஆனா இதயத்ததான் நானும் பாக்கல...

விட்டுப்போன என்னை  விட்டுப்போன...
போகும்போது என் உசுர எதுக்கு எடுத்துப்போன

என் இதயம் இருக்கும்.. துடிக்கும் இடம் அறிந்தும்..
ஏனோ தெரியல நானும் ஏதும் செய்யல...

என்னைக் கொள்ளவும் யாருமில்லாத வருத்தம் எனக்கு 
சேத்த பிணத்திணை  எத்தணை  முறை கொல்வதென்று
உலகம் கேள்வி கேட்குது என்னை பார்த்து...
<கவிதைப்பெண்>
















இன்னும் உனக்கு இங்கு என்ன வேலை ...
வந்த நேரம்தான் சரியில்லை ..
போகும்போதாவது சரியான நேரத்தில் போ ...

தனித்து வாழ தயார் நிலையில் நான் இங்கே...
உனது துணையை  எதிர்பார்த்த காலம் எங்கே..
<கவிதைப்பெண்>

திங்கள், 8 அக்டோபர், 2012




காதல் தோல்வி கண்டவன்  எவனும்
புரட்சிக்கவி எழுதாமல் இல்லை
காதல் கொள்ளாதவன் எவனும்
காதல் கவி எழுதாமல் இல்லை ...
<கவிதைப்பெண்>
இரவினில் தூக்கம் தினம் தினம் சண்டைப் பிடிக்கிறது..
நிலவினைக் கட்டி உறங்கிட கட்டளைப் போடுது ...
மனதினைத் திருடிய கள்வனைத் தேடியே பகல் முளுவதுமேனோ 
பைத்தியம் போல வீதியில் திரியிது...
மாலை நேரம் மயங்கி கடலினில் விழுந்ததும் தெளிந்தது...
கண்டவையெல்லாம் கனவேனப்  புரிந்தது...
இறந்தப் பிணத்திற்கு ஏதடி காதலன்...
<கவிதைப்பெண்>

சனி, 6 அக்டோபர், 2012

மனிதர்கள் எப்போதும் அவர்கள்  செய்யும் ஒவ்வொன்றுக்கும் சூழ்நிலையையே காரணம் காட்டுவார்கள் ...
சூழ்நிலையை நம்புவது வாழ்கையின் சூத்திரத்தினைக்  கற்றுத்தராது  மனித....
சுயபுத்தியை வைத்து சூழ்நிலையை மாற்ற கற்றுக்கொள்
நீ ஏற்படுத்தும் மாற்றமானது  உன் வாழ்கையின் வழியை மாற்றும் ...
<கவிதைப்பெண்>