செவ்வாய், 8 ஏப்ரல், 2014

உன்னைக் கண்ட முதல் நாளன்றே
கண்டறிந்தேன் இது காதலென்று
என் முருகன் என் வேண்டுதலை கேட்டு
உன்னை எனக்கென படைதானே ...

உன் மனதை எனக்கு பரிசளித்து
உன் எண்ணத்தில் என்னை குடிவைதாய்
உன் மேல் அளவில்லா ஆசையை வளரவைது
உன் ஒருவனை மட்டுமே பார்க்கச் செய்தாய்

தேனமுதாய் சுவையுடும் உன் குரலினால்
பல அமுத ராகம் நீ பாடி
உன் மடியில் என்னைச் சாய்த்து..
தாயின் தாலாடினை எனக்கு  நினைவுடினாய்...

அனுதினமும் என்னை புன்னகைக்க செய்தாய் நீ
என்னுள் பல மாற்றங்கள் தந்தாய் நீ
நானாய் நான் இருந்தும் ... உன்னுள் நுழையாமலே..
நீயாய் ஆனேனே ..  என்னை முழுவதும் தொலைத்தேனே...

என்ன மாயம் செய்தாயோ...
யாரும் வெல்ல முடிய என் மனதை நீ வென்றாய்
வாழ்நாள் முழுவதும் உன் கை கோர்த்து நடக்க என் உள்ளம் ஏங்குதே...
ஏழேழு பிறப்பிலும் உன்னோடு நான் வாழ என் உயிரும் விரும்புதே...

<கவிதைப்பெண்> 

வெள்ளி, 14 மார்ச், 2014

ஊரெல்லாம் உறங்கும் இந்த நடுநிசி வேளையிலே
நிலா மாமா காவல்காரனாக...
காதல் ஊஞ்சலில் தூரப்பயணம் செய்யும் நெஞ்சமே
என் சின்னச்சிறு நெஞ்சமே...

சில்லென வீசும் இளந்தென்றல் என்னைத் தொட்டு செல்கையில்
என் கைகள் இரண்டும் என்னை இறுக்கி அணைக்குதே...
மோக அலைகள் என் உணர்வுகளை சீண்டிப் பார்கையில்
கொஞ்சமாய் என் பெண்மையும் என்னை கெஞ்சுதே மெல்ல கொஞ்சுதே..

உன் விரல்களின் தீண்டலுக்கு என் இமைகளும் ஏங்கும் இந்நேரம்
தித்திக்கும் இதழ் பானம் பருகுவது எந்நேரம்
காதல் ஆசைகள் என் உணர்வினைக் கட்டி இழுக்குதே..
மோக கனவுகள் என் உணர்ச்சியை தட்டி எழுப்புதே..

தென்றலின் பாட்டுக்கு தலையசைக்கும் தென்னை கீற்றுகளே
என் மன்னவன் மார்பினில் நான் தலைச் சாய்வதெப்போது
கண்களை சிமிட்டி வண்ணமாய் ஜொலிக்கும் நட்சத்திங்க்களே
என் மடி சாய்ந்து என்னவன் உங்களை ரசிப்பதெப்பொது

<கவிதைப்பெண்>

வெள்ளி, 27 டிசம்பர், 2013

சோவென பெய்யும் மழையில்...
உன் அருகினில் நான் , என்னோடு நீ
நம்மோடு தாளடும் இசை... மெல்லிசை...

இடையிடையே கொஞ்சம் இடிகள்...
இருக்கமாய் அணைத்துக்கொள்ள 
இருவருக்கும் பிறக்கும் வழிகள்... 

அலை அலையாய் சில்லென்றே காற்று வீசும்
இதயங்கள் பரிமாறும் இதமான புது காவியம்
இன்பமாய் அரங்கேறும் அந்நேரம்

இதுபோதும் எப்போதும்..
புது உறவினை தொடர்ந்திடும்  இரு உள்ளம்..

<கவிதைப்பெண்>

வெள்ளி, 6 டிசம்பர், 2013

உம்மை போல் ஒரு தலைவன் இவ்வுலகத்திற்கு  இனி ஏழேழு ஜென்மத்திற்கும் கிடைக்கபோவதில்லை..
சரித்திரம் வியந்து பார்க்கும் சரித்திர புருஷனே..
தென் ஆபிரிக்காவின் மூத்த குடிமகனே...
கறுப்பின மக்களை நிறவெரிப்பிடித்த அரக்கர்கள் பந்தாடியபோது
சீறிப்ப பாந்து அவர்களின் கொட்டத்தை அடக்கியவனே
தென் ஆபிரிக்க கறுப்பின மக்களுக்கு விடுதலை பரிசளித்த மன்னவனே

உலக சமாதானத்துக்காக போராடிய உமக்கு
இந்திய நேரு சமாதான விருந்தினைக் கொடுத்தது
உன் தலைமைத்துவத்தை பார்த்து மீண்டும் அதே இந்திய
உமக்கு பாரத ரத்னா விருந்தை வழங்கியது
உலக அமைதிக்காக நீர் செய்த தியாகங்களை கண்டு
உமக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது 
அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருந்தினையும் கைப்பற்றினாயே

இப்படியாய் பல விருந்துகள் நீர் பெற்றிருந்தாலும்
உமக்கென நீர் என்றும் எதிர்பார்க்காத  ஒரு விருந்து
மக்கள் மனதில் நீர் இன்னமும் வாழ விதிவிளக்காய் இருப்பது
என்றுமே அழியாத ஓர் இடம் அவர்களின் மனதினில்
உமக்கென மட்டுமே

<கவிதைப்பெண்>





புதன், 30 அக்டோபர், 2013

விலைமதிப்பற்ற புன்னகையை  என்றும் உங்கள் இதழ்களில் 
அணிய மறுக்காதீர்கள் ; மறக்காதீர்கள்...
இன்பமோ துன்பமோ எந்நேரத்தினிலும் உங்கள் இதழ்களில் 
புன்னகையினை அணிந்திருங்கள்...
புன்னகையால் உலகினை நம்வசம் ஆகுவோம்...
<கவிதைப்பெண்> 

திங்கள், 21 அக்டோபர், 2013

உங்கள் மனம் சொல்லும் வழியில் செல்லுங்கள்...
எதையும் விரும்பிச் செய்யுங்கள்...
செய்வதைத் திருந்தச் செய்யுங்கள்...
இனிவரும் காலங்களைச் சிறப்பாய் அமைத்திடுங்கள்...
<கவிதைப்பெண்>

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

அனைவரும் பேசும் ஒரே மொழி
காதல் மொழி
அதன் அர்த்தங்களை புரிந்துகொள்வது
இதயங்கள் மட்டுமே...
<கவிதைப்பெண்>

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

நாம் விரும்புபவர் நம்மை விரும்புவதில்லை
நம்மை விரும்புபவரை நாம் விரும்புவதில்லை

நேற்று நெருக்கமாய் பழகிய உறவுகள்
இன்று அருகினில் இல்லை

இன்று அருகினில் இருக்கும் உறவுகள்
நாளை நிரந்தரமில்லை

இறைவன் படைத்த விதியெனும் சாலையில்
தொடர்கிறேன் என் வாழ்க்கை பயணத்தை
தொடர மனமில்லாமலே....

<கவிதைப்பெண்>

வியாழன், 5 செப்டம்பர், 2013

என் தமிழ் தாயின் செல்ல குழந்தையின் கையெழுத்து 
எம்மை தமிழின்பால் மோகம் கொண்டு காதல் கொள்ளச் செய்த 
என் தமிழ்க்  காதலனின் கையெழுத்து  
தமிழ் மேல் நான் கொண்ட காதலுக்கு சாட்சியான 
என் குருவின் கையெழுத்து...
<கவிதைப்பெண்>

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

பிறக்கும் ஒவ்வொரு நாளும் நல்லதாகவே பிறக்கத்தும்
நொடிகளில் பூக்கும் ஒவ்வொரு எண்ணங்களும்  நல்லதாகவே பூக்கட்டும்.....
இனிய காலை வணக்கம்... ​ 
<கவிதைப்பெண்>