வெள்ளி, 17 ஜூன், 2011

கடவுள் இருக்கிறார்....
பத்து மாதம் சுமையறியாது பல இன்னல்களை தாங்கி நம்மை இந்த பிரபஞ்சத்தில் காலடி எடுத்து வைக்க துணை புரிந்த அம்மாவின் உருவில்
நமக்கு உயிரை கொடுத்து இந்த பிரபஞ்சத்தில் வாழ வாய்பு கொடுத்த தந்தையின் உருவில் 
எந்த பற்றினையும் அறியாது பூவில் புதிதாய் பூத குழந்தையின் உருவில் 
தான் துன்பத்தில் இருந்தாலும் .. துன்பத்தில் இருக்கும் மற்றொருவனை பார்த்து கவலைப்பட்டது உதைவி கரம் நீட்டும்  நல்ல  உள்ளங்களின் உருவில்....  
இன்னும் சொல்லப்போனால், தன்னால் படைக்கப்பட்ட உயிரினங்கள் தான் வகுத்த விதியினை மீறி வேறு பாதையில் செல்வதைக்  கண்கொண்டு சீற்றத்தில் தன் படைப்புக்களை தானே ஆழிப்பேரலை, நிலநடுக்கம், சூறாவளி போன்ற  பஞ்சபூதங்ககளின் வழி  அழிப்பதான் வாழி கண்டுக்கொண்டேன் கடவுளின் அவதாராதினை...
<கவிதைப்பெண்>

செவ்வாய், 14 ஜூன், 2011

ஆசைகளும் கனவுகளும் இருந்தால் மட்டும் போதாது, அதை அடைந்து அனுபவிக்கவும் வேண்டும்.-கவிதைப்பெண்

திங்கள், 13 ஜூன், 2011

நிற்காமல் பயணிக்கும் எந்தன் கால்கள்
உன்னைக் கண்டவுடன் நின்றதும் ஏனோ...

நிறுத்தாமல் பேசும் என் இதழ்கள்
என்று மௌனம்மானதும் ஏனோ...

தரையில் நின்றாலும் வானில் பறப்பதுபோல
நினைவு அலைப்பாய்வதும்  ஏனோ...

<கவிதைப்பெண்>